தமிழ் தவறாமல் யின் அர்த்தம்

தவறாமல்

வினையடை

 • 1

  எந்தக் காரணத்தை முன்னிட்டும் தவிர்த்துவிடாமல்.

  ‘திருமணத்தில் தாங்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று நண்பர் கூறினார்’
  ‘கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’

 • 2

  (குறிப்பிடப்படும் கால வரம்பை) மீறாமல்.

  ‘வருடம் தவறாமல் நான் என் சொந்த ஊருக்குப் போவேன்’
  ‘மாதம் தவறாமல் ஒழுங்காகப் பணம் கட்டிவிடு’