தவறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தவறு1தவறு2

தவறு1

வினைச்சொல்தவற, தவறி

 • 1

  (செய்ய, நிகழ வேண்டியதிலிருந்து விலகுதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 முடியாமல் போதல்

   ‘கிளம்பும் அவசரத்தில் மேலதிகாரி சொன்னதைக் கவனிக்கத் தவறிவிட்டேன்’
   ‘தேர்வுக் கட்டணத்தை உரிய தேதிக்குள் கட்டத் தவறினால் அபராதம் உண்டு’
   ‘தேர்வில் வெற்றி பெறத் தவறிவிட்டான்’

  2. 1.2 (உரிய காலத்தைக் கடந்து) தாமதமாதல்

   ‘பருவ மழை தவறியதால் கடும் வறட்சி நிலவுகிறது’

  3. 1.3 (உரிய போக்கிலிருந்து அல்லது குறித்த இலக்கிலிருந்து) விலகுதல்; மாறுதல்

   ‘பணம் தருவதாகச் சொல்லிவிட்டு வாக்குத் தவறலாமா?’
   ‘புதிய ஊரில் நண்பரைத் தேடிச் சென்று வழி தவறி எங்கெல்லாமோ அலைய நேர்ந்தது’
   ‘அவர் குறி தவறாமல் சுடுவதில் வல்லவர்’

 • 2

  (தன் நிலையிலிருந்து நீங்குதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (நிதானம், நினைவு) இழத்தல்

   ‘அடிபட்டவுடன் சுய நினைவு தவறிக் கீழே விழுந்தார்’

  2. 2.2 (கையிலிருந்து) நழுவுதல்

   ‘கண்ணாடி தவறி விழுந்து உடைந்துவிட்டது’

  3. 2.3 (கால்) இடறுதல்

   ‘பேருந்தில் ஏறப்போனவர் கால்தவறிக் கீழே விழுந்தார்’

  4. 2.4 இறத்தல்

   ‘என் அம்மா தவறி ஒரு வருடம் ஆகிறது’

தவறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தவறு1தவறு2

தவறு2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தப்பு.

  ‘தவறு செய்துவிட்டதால் ஏற்பட்ட குற்ற உணர்வு’
  ‘குடை எடுக்காமல் வந்தது தவறுதான்’
  ‘இந்தப் புத்தகத்தைத் தவறாகக் கொண்டுவந்துவிட்டேன்’
  ‘தான் செய்த தவறுக்காக அவன் வருந்தினான்’

 • 2

  சரியானதாகவோ ஏற்றதாகவோ முறையானதாகவோ இல்லாதது; பிழை; கோளாறு.

  ‘புத்தகத்தை அச்சிட்டதில் தவறுகள் ஏற்பட்டுவிட்டன’
  ‘கடிதத்தில் தவறான முகவரியை எழுதிவிட்டாய்’
  ‘அவன் தவறான பாதையில் போய்க்கொண்டிருக்கிறான்’
  ‘கடிதத்தைத் தவறாக அவரிடம் கொடுத்துவிட்டேன்’
  ‘இந்தத் திட்டத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்பில்லை’