தமிழ் தவழ் யின் அர்த்தம்

தவழ்

வினைச்சொல்தவழ, தவழ்ந்து

 • 1

  (குழந்தை நடப்பதற்குப் பழகும் முன்னர் தரையில்) கைகளை ஊன்றிக் கால் முட்டிகளைப் பயன்படுத்தி மெதுவாக நகர்தல்.

  ‘குழந்தை மெல்லத் தவழ்ந்து வந்து அவனுடைய கால்களைக் கட்டிக்கொண்டது’

 • 2

  (காற்று) மென்மையாக வீசுதல்.

  ‘தென்றல் தவழ்ந்து வரும் மாலை நேரம்’
  ‘ஜன்னல் வழியாக இதமான காற்று தவழ்ந்து வந்தது’

 • 3

  (முகத்தில் அல்லது உதட்டில் புன்னகை) தோன்றுதல்/ (ஓர் இடத்தில் அமைதி) நிலவுதல்.

  ‘புன்னகை தவழும் முகம்’
  ‘அமைதி தவழ்கிற இடத்தில் ஆனந்தம் நிலவும்’
  ‘அவர் முகத்தில் அன்பு தவழ்கிறது’
  ‘நான் சொன்னதைக் கேட்டதும் அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது’