தமிழ் தவி யின் அர்த்தம்

தவி

வினைச்சொல்தவிக்க, தவித்து

 • 1

  (இல்லாமை, இயலாமை அல்லது இக்கட்டு முதலியவை ஏற்படுத்தும் சூழலில்) வருந்திக் கலங்குதல்; திணறுதல்.

  ‘கைச் செலவுக்குக்கூடப் பணம் இல்லாமல் தவிக்க வேண்டிய நிலை’
  ‘லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள்’
  ‘வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் கிராமங்கள்’
  உரு வழக்கு ‘போட்டியின் ஆரம்பத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவித்தது’

 • 2

  வட்டார வழக்கு தாகத்தால் வருந்துதல்; தாகமெடுத்தல்.

  ‘தவிக்கிறது, தண்ணீர் கொடு’