தமிழ் தவிர யின் அர்த்தம்

தவிர

இடைச்சொல்

 • 1

  ‘(குறிப்பிடப்படுவது அல்லது குறிப்பிடப்படுபவர்) நீங்கலாக’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘இந்த மின்விசிறியைத் தவிர வேறு எந்த மின்விசிறியையும் போட வேண்டாம்’
  ‘உன்னைத் தவிர எல்லோரும் வீட்டுக்குப் போய்விட்டார்கள்’
  ‘தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் படித்துக்கொண்டே இருப்பான்’

 • 2

  (‘ஏ’ என்ற இடைச்சொல் சேர்ந்த சொல்லின் பின் வரும்போது) ‘கூறப்படுவதிலிருந்து இயல்பான விளைவு இல்லாமல் மாறான நிலை ஏற்படுகிறது’ என்ற பொருளில் இரண்டு தொடர்களை இணைக்கப் பயன்படும் இடைச்சொல்.

  ‘மழை பெய்ததே தவிர வெப்பம் குறையவில்லை’
  ‘நான் எழுத்தாளன்தானே தவிர சமூக சீர்திருத்தவாதி அல்ல’

தமிழ் தவிர் யின் அர்த்தம்

தவிர்

வினைச்சொல்தவிர்க்க, தவிர்த்து

 • 1

  (ஒன்று) நிகழாதவாறு பார்த்துக்கொள்ளுதல்.

  ‘இவ்வளவு தூரம் கருத்து வேறுபாடுகள் வளர்ந்த பிறகு கட்சி பிளவுபடுவதைத் தவிர்க்க முடியாது’
  ‘இந்த விபத்தை ஓட்டுநரால் தவிர்த்திருக்க முடியும்’

 • 2

  (பயன்படுத்தாமல் அல்லது சேர்த்துக்கொள்ளாமல்) விடுதல்.

  ‘பழுதடைந்த சாலையைத் தவிர்த்து விட்டு மாற்றுப் பாதையில் சென்றேன்’
  ‘நீங்கள் உணவில் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும்’