தமிழ் தாக்கம் யின் அர்த்தம்

தாக்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்தும் வகையிலான) பாதிப்பு.

  ‘உங்கள் கதைகள் வாசகனின் மனத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?’
  ‘மேல்நாட்டுப் பண்பாட்டின் தாக்கத்தை அவருடைய பேச்சில் காண முடிகிறது’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு மனத்தைப் புண்படுத்தும் அல்லது வேதனைக்கு உள்ளாக்கும் தன்மை.

  ‘உன் பேச்சு தாக்கமாக இருக்கிறது’
  ‘அவரிடம் கேட்ட தாக்கமான கேள்விகளால் தலைகுனிந்தார்’