தமிழ் தாக்கு யின் அர்த்தம்

தாக்கு

வினைச்சொல்தாக்க, தாக்கி

 • 1

  (ஒருவரை) அடித்தல், வெட்டுதல் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படுத்துதல்.

  ‘கத்தி, அரிவாளோடு வந்த கும்பல் அவரைச் சூழ்ந்துகொண்டு தாக்கியது’

 • 2

  (விலங்கு, பூச்சி போன்றவை) உடலுக்கும் உயிருக்கும் பாதிப்பு விளைவித்தல்.

  ‘காட்டுக்குள் தனியே சென்றவனைக் கரடி தாக்கியது’
  ‘கூட்டமாக வரும் யானைகள் யாரையும் தாக்காது’
  ‘தேனடையில் கைவைத்தால் தேனீக்கள் கூட்டமாக வந்து தாக்கும்’

 • 3

  (புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைச் சக்திகள்) நாசம் விளைவித்தல்.

  ‘சுனாமி தாக்கிய நாகைப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்’
  ‘காஷ்மீரில் மீண்டும் பூகம்பம் தாக்கும் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது’
  ‘வேகமாகத் தாக்கிய அலை படகைக் கவிழ்த்தது’

 • 4

  (ஒருவரின் மேல் மின்சாரம்) பாய்தல்.

  ‘அறுந்து கிடந்த கம்பியின் மேல் கால் வைத்தவர் மின்சாரம் தாக்கி இறந்தார்’

 • 5

  (ஒரு நாட்டின் ராணுவம் மற்றொரு நாட்டுக்கு) சேதம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுதல்.

  ‘எதிரி விமானங்கள் குண்டு வீசி எல்லை ஓரப் பகுதியைத் தாக்கின’

 • 6

  (பேச்சில் அல்லது எழுத்தில்) குற்றம்குறைகளைக் கூறிக் கடுமையாக விமர்சித்தல்.

  ‘தலைவரைத் தாக்கிப் பேசுமளவுக்குக் கட்சியில் அதிருப்தி நிலவுகிறது’
  ‘அந்தப் பத்திரிகை ஆளும் கட்சியைத் தொடர்ந்து தாக்கி எழுதிவருகிறது’

 • 7

  (நோய், விஷ வாயு முதலியவை) பாதித்தல்.

  ‘கிணற்றில் இறங்கியவர் விஷ வாயு தாக்கி மயக்கமுற்றார்’
  ‘நெற்பயிரைச் சுருட்டை நோய் தாக்கியுள்ளது’
  ‘இடி தாக்கிப் பத்து ஆடுகள் இறந்தன’

தமிழ் தாக்கு யின் அர்த்தம்

தாக்கு

வினைச்சொல்தாக்க, தாக்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு புதைத்தல்.

  ‘குடிநிலத்துக்குள் செத்த மிருகங்களைத் தாக்கக் கூடாது’