தமிழ் தாக்குதல் யின் அர்த்தம்

தாக்குதல்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றை அல்லது ஒருவரை ஆயுதங்கள் போன்றவற்றைக் கொண்டு) தாக்கும் செயல்.

  ‘அமைச்சரைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது’
  ‘வான்வழித் தாக்குதல்’

 • 2

  (கால்பந்து முதலிய விளையாட்டுகளில்) (எதிரணிப் பகுதியை நோக்கி முன்னேறி) நெருக்குதல் அளிக்கும் வகையில் விளையாடுதல்.

  ‘ஜெர்மன் அணியினரின் அலைஅலையான தாக்குதலை இத்தாலி அணியினர் நன்றாகச் சமாளித்தனர்’