தமிழ் தாக்குப்பிடி யின் அர்த்தம்

தாக்குப்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

 • 1

  (நிலைமைக்குத் தக்கவாறு செயல்பட்டு) ஈடுகொடுத்தல்; சமாளித்தல்.

  ‘பனிச்சரிவில் மாட்டிக்கொண்டவர்கள் கைவசம் உணவுப் பொருள் இருந்ததால் பத்து மணி நேரம் தாக்குப்பிடித்தனர்’
  ‘இன்றைய கைப்பந்து போட்டியில் எதிர் அணியினரின் மின்னல் வேகத் தாக்குதலை நம் அணியினர் தாக்குப்பிடித்து விளையாடினார்கள்’

 • 2

  (தாக்குதல், நஷ்டம் போன்றவற்றால் பாதிப்பு அடையாமல்) தாங்கி நிலைத்தல்.

  ‘போன மழைக்கு எப்படியோ இந்தக் கட்டடம் தாக்குப்பிடித்து விட்டது’
  ‘நோய் முற்றியிருக்கும் நிலையில் அப்பா அடுத்த மாதம்வரை தாக்குப்பிடிப்பாரா என்பது சந்தேகம்’
  ‘இவ்வளவு பெரிய நஷ்டத்தை நம் நிறுவனம் எப்படித் தாக்குப்பிடிக்கப்போகிறது?’