தமிழ் தாட்டுபூட்டென்று யின் அர்த்தம்

தாட்டுபூட்டென்று

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (ஒருவருடைய பேச்சைக் குறித்து வரும்போது) (அதிகாரத்தைக் காட்டும் வகையில்) ஆர்ப்பாட்டமாக.

  ‘தாட்டுபூட்டென்று ஆங்கிலத்தில் பேசினால் பயந்துவிடுவோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறான்’
  ‘இதற்கெல்லாம் பணம் கேட்டால் அப்பா தாட்டுபூட்டென்று கத்துவார்’

 • 2

  பேச்சு வழக்கு (செலவு குறித்து வரும்போது) அநாவசியமாக ஆடம்பரத்துடன்.

  ‘இப்படித் தாட்டுபூட்டென்று பணத்தை வாரி இறைத்தால் கடைசியில் ஓட்டாண்டியாக வேண்டியதுதான்’