தமிழ் தாண்டவமாடு யின் அர்த்தம்

தாண்டவமாடு

வினைச்சொல்-ஆட, -ஆடி

 • 1

  (வன்முறை, வறுமை போன்றவை) பெருமளவில் பரவியிருத்தல்; தலைவிரித்தாடுதல்.

  ‘ஜாதிக் கலவரத்தால் ஊரில் வன்முறை தாண்டவமாடுகிறது’
  ‘நாட்டில் வறுமை தாண்டவமாடும்போது இப்படிப்பட்ட ஆடம்பர விழாக்கள் அவசியம்தானா?’

 • 2

  (முகத்தில் மகிழ்ச்சி, கோபம் முதலிய உணர்ச்சிகள்) பெருமளவில் வெளிப்படுதல்.

  ‘செய்தியைக் கேட்டவுடன் அவன் முகத்தில் உற்சாகம் தாண்டவமாடியது’