தமிழ் தான் யின் அர்த்தம்

தான்

பெயர்ச்சொல்

 • 1

  பிறரைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தன்னை மட்டுமே சார்ந்திருக்கும் உணர்வு நிலை.

  ‘தான் என்னும் நினைப்பு’

தமிழ் தான் யின் அர்த்தம்

தான்

பிரதிப்பெயர்

 • 1

  உயர்திணைப் படர்க்கை ஒருமைப் பெயருக்கு மாற்றாக வரும் பிரதிப்பெயர்.

  ‘தான் மிகவும் நன்றாகப் பாடுவதாக அவள் நினைத்துக்கொண்டிருக்கிறாள்’

 • 2

  (பொதுவான கூற்றில்) ஒருவர்.

  ‘தான் அவதிப்பட்டாலும் பிறருக்குத் தொல்லை கொடுக்க மாட்டார்’