தானம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தானம்1தானம்2தானம்3

தானம்1

பெயர்ச்சொல்

 • 1

  (பிறருக்கு நன்மை செய்யும் நோக்கத்தில்) தன்னிடம் இருப்பதை அல்லது தன்னால் முடிந்ததை எந்த விதப் பயனையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு வழங்குதல்.

  ‘தனக்கு இருந்த சொத்தையெல்லாம் கோயிலுக்குத் தானமாகக் கொடுத்து விட்டார்’
  ‘இரத்த தானம்’

 • 2

  காண்க: கண் தானம்

தானம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தானம்1தானம்2தானம்3

தானம்2

பெயர்ச்சொல்

இசைத்துறை
 • 1

  இசைத்துறை
  ராகத்தோடும் லயத்தோடும் இணைந்த, ஆனால் தாளத்தில் அமையாத சொற்களின் கூட்டு.

தானம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தானம்1தானம்2தானம்3

தானம்3

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு ஸ்தானம்; இலக்கம்.

  ‘ஆறு தானக் கணக்கை இந்தச் சிறுபிள்ளைக்குக் கொடுக்கலாமா?’
  ‘அவர் எத்தனை தானத்தில் நன்கொடை தந்துள்ளார்?’