தமிழ் தாமதம் யின் அர்த்தம்

தாமதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான) உரிய நேரம் கழிந்துவிட்ட நிலை.

  ‘வண்டி இரண்டு மணி நேரம் தாமதமா?’
  ‘தாமதமாக வந்த மாணவனை வகுப்பிற்குள் ஆசிரியர் அனுமதிக்கவில்லை’
  ‘இந்தக் கடிதத்தைத் தாமதம் செய்யாமல் அனுப்பிவிடுங்கள்’
  ‘அப்பா வீடு திரும்பத் தாமதமாகும்’

தமிழ் தாமதம் யின் அர்த்தம்

தாமதம்

இடைச்சொல்

 • 1

  (‘செய்தது’ போன்ற தொழிற்பெயருடன் ‘தான்’ என்னும் சொல் இணைந்த தொடருக்குப் பின் வரும்போது) ‘சொன்ன அல்லது நிகழ்ந்த அதே கணம்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘உடனே’.

  ‘என்னைப் பார்த்ததுதான் தாமதம், இருக்கையை விட்டே எழுந்துவிட்டான்’
  ‘நான் ‘போ’ என்று சொன்னதுதான் தாமதம், சிட்டாகப் பறந்துவிட்டான்’