தமிழ் தாமதி யின் அர்த்தம்

தாமதி

வினைச்சொல்தாமதிக்க, தாமதித்து

 • 1

  (குறித்த நேரத்தில் அல்லது உடனே ஒன்றைச் செய்யாமல்) நேரம் கடத்துதல்; கால நீட்டிப்புச் செய்தல்.

  ‘காயம் அடைந்தவரைத் தாமதிக்காமல் மருத்துவமனையில் சேர்த்ததால் காப்பாற்ற முடிந்தது’
  ‘அவர் முதலில் போகட்டும். நீ கொஞ்சம் தாமதித்துப் போ’
  ‘பணத்தை உடனே கொடுக்காமல் சற்றுத் தாமதித்தார்’

 • 2

  வட்டார வழக்கு காத்திருத்தல்.

  ‘‘குலவை போடுங்கள்’ என்று மூதாட்டி சொன்னதும் அதற்காகத் தாமதித்து நின்றவர்கள்போல் எல்லோரும் குலவை போட்டார்கள்’