தமிழ் தாம்பத்தியம் யின் அர்த்தம்

தாம்பத்தியம்

பெயர்ச்சொல்

 • 1

  (கணவன் மனைவியாக வாழும்) குடும்ப வாழ்க்கை.

  ‘எங்களுடைய முப்பது ஆண்டு காலத் தாம்பத்தியத்தில் நாங்கள் சண்டை போட்டுக்கொண்டதே இல்லை’

 • 2

  கணவன் மனைவிக்கு இடையிலான உடலுறவு.

  ‘தாம்பத்திய உறவில் திருப்தி இல்லாததால் சிலர் விவாகரத்து கோருகின்றனர்’
  ‘தாம்பத்திய சுகம்’