தமிழ் தாய் யின் அர்த்தம்

தாய்

பெயர்ச்சொல்

 • 1

  அம்மா; அன்னை/(விலங்கினத்தில்) குட்டி ஈன்றது அல்லது குஞ்சு பொரித்தது.

  ‘குழந்தை தாயைக் காணாமல் அழுதுகொண்டிருந்தது’
  ‘தாய்ப் பசு’
  ‘தாய்ப் பறவை’

 • 2

  (கட்சி, மொழி முதலியவற்றைக் குறிக்கும்போது) பிற பிரிவுகள், கிளைகள் தோன்றுவதற்கு அடிப்படையாக இருப்பது.

  ‘இந்தக் கட்சிகளுக்குத் தாய்க் கழகம் எங்கள் கட்சிதான்’