தமிழ் தாயகம் யின் அர்த்தம்

தாயகம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு தாய்நாடு.

  ‘வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நாளை தாயகம் திரும்புகிறார்’
  ‘அகதிகளை அவர்களது தாயகத்துக்குத் திருப்பி அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது’

 • 2

  உயர் வழக்கு (தற்போது பல நாடுகளிலும் காணப்படும் ஒன்று) முதலில் தோன்றிய இடம்.

  ‘சதுரங்கத்தின் தாயகம் இந்தியா என்று கூறப்படுகிறது’