தமிழ் தாய்மை யின் அர்த்தம்

தாய்மை

பெயர்ச்சொல்

 • 1

  குழந்தை பெறும் நிலை; கர்ப்பம்.

  ‘தாய்மைப்பேறு அடைந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி அவள் கண்களில் மின்னியது’

 • 2

  தாய்க்கு உரிய தன்மைகள், குணங்கள் முதலியவை.

  ‘குழந்தையை எப்படி இந்தப் பெண்ணால் காப்பாற்ற முடிந்தது? தாய்மை தந்த பலம் அது!’
  ‘ஆசிரியரிடம் தாய்மை அன்பை எதிர்பார்க்கிறோம்’