தமிழ் தாள யின் அர்த்தம்

தாள

வினையடை

 • 1

  (‘முடி’ என்ற வினைக்கு முன்பு வரும்போது) (வலி, துன்பம் முதலியவற்றை) தாங்க; பொறுக்க.

  ‘துக்கம் தாள முடியாமல் அழுதுவிட்டான்’
  ‘இந்த வலியை எப்படி உன்னால் தாள முடிந்தது?’
  ‘இந்தச் சித்திரவதையை இனியும் என்னால் தாள முடியாது’

தமிழ் தாள் யின் அர்த்தம்

தாள்

பெயர்ச்சொல்

 • 1

  மரக் கூழ், கரும்புச் சக்கை போன்றவற்றிலிருந்து அல்லது செயற்கை வேதிப்பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் (எழுதுதல், அச்சடித்தல் முதலியவற்றுக்கான) மெல்லிய பொருள்; காகிதம்.

  ‘எத்தனை தாள் வேண்டும் என்று கடைக்காரர் கேட்டார்’
  ‘இந்த வெள்ளைத் தாளை நான்காகக் கத்தரித்துக் கொடு’
  ‘நூல் நல்ல தாளில் அச்சிடப்பட்டிருந்தது’
  ‘திருமணப் பத்திரிகையை பிளாஸ்டிக் தாளில் அச்சடித்திருந்தனர்’

 • 2

  (இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட பாடத்தில்) ஒரு தேர்வுக்கு உரிய பாடம்.

  ‘தமிழ் முதல் தாளில் அவன் நிறைய மதிப்பெண்கள் பெற்றிருந்தான்’

தமிழ் தாள் யின் அர்த்தம்

தாள்

பெயர்ச்சொல்

 • 1

  (நெல், கம்பு முதலிய) பயிர்களின் கதிர் தவிர்ந்த பாகம்.

  ‘கதிர் அறுத்த பின் தாள்களின் தட்டைகளை நிலத்திலேயே அழுகச்செய்து உரமாகப் பயன்படுத்தலாம்’

தமிழ் தாள் யின் அர்த்தம்

தாள்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு பாதம்.

  ‘முருகனின் தாள் பணிந்தோம்’

தமிழ் தாள் யின் அர்த்தம்

தாள்

பெயர்ச்சொல்

 • 1

  தாழ்ப்பாள்.