தமிழ் தாளம் யின் அர்த்தம்

தாளம்

பெயர்ச்சொல்

 • 1

  இசைத்துறை
  அட்சரக் காலங்களைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கொண்ட சேர்க்கை.

 • 2

  (கவிதையில்) ஒத்திசைவினால் உண்டாகும் ஓசை நயம்.

  ‘கவிதையின் பாவத்திலும் தாளத்திலும் கவனம் செலுத்தும் கவிஞர் இவர்’

 • 3

  இசையில் காலப் பிரமாணத்தைப் பேணுவதற்காகத் தொடர்ந்து கையினால் தட்டப்படும், இரண்டு சிறு வட்டுகளைக் கொண்ட தாளக் கருவி.