தமிழ் தாளி யின் அர்த்தம்

தாளி

வினைச்சொல்தாளிக்க, தாளித்து

 • 1

  (குழம்பு, சட்னி போன்றவற்றுக்கு) மணம் சேர்ப்பதற்காகக் கடுகு, உளுத்தம்பருப்பு போன்றவற்றை எண்ணெயில் பொரித்தல்.

  ‘சோறு வடித்துவிட்டேன். குழம்பு மட்டும் தாளிக்க வேண்டும்’
  ‘தாளிக்கக் கறிவேப்பிலை இல்லை’

 • 2

  வட்டார வழக்கு (தனக்குப் பெருமை தரக் கூடியவற்றை) வேகமாக அடுக்கிக் கூறி பெருமையடித்துக்கொள்ளுதல்.

  ‘பிறந்த வீட்டுப் பெருமைகளை இங்கே தாளிக்காதே!’
  ‘மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டதால் ரொம்பத் தாளிக்கிறார்’

 • 3

  வட்டார வழக்கு கடுமையாகத் திட்டுதல்.

  ‘கூப்பிட்டபோதே தெரியும் அவர் என்னைத் தாளிக்கப்போகிறார் என்று!’