தமிழ் தாழ யின் அர்த்தம்

தாழ

வினையடை

 • 1

  தாழ்வாக; கீழாக.

  ‘விமானம் தாழப் பறந்து வட்டமடித்தது’

தமிழ் தாழ் யின் அர்த்தம்

தாழ்

வினைச்சொல்தாழ, தாழ்ந்து

 • 1

  கீழ்நோக்கி வருதல்.

  ‘சிறுவர்கள் ஏறி நின்றதால் மரக் கிளை தாழ்ந்திருந்தது’
  ‘விமானம் தாழ்ந்து பறந்து குண்டு வீசியது’
  ‘அலைகள் உயர்ந்து தாழ்ந்தன’

 • 2

  (குரலின் ஒலி) குறைதல்/(தரத்தில்) குறைதல்.

  ‘அவருடைய குரல் தாழ்ந்தது’
  ‘நீ அவருக்கு எந்த விதத்திலும் தாழ்ந்தவன் இல்லை’

 • 3

  (மாலையின் அறிகுறியாக வெயில்) சாய்தல்.

  ‘வெயில் தாழ்ந்ததும் வெளியே போகலாம்’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு மூழ்குதல்.

  ‘கிணற்றுக்குள் விழுந்த பொடியன் தாழ்ந்துவிட்டானாம்’
  ‘ஒல்லி கட்டி நீந்தப் பழகினால் தாழ மாட்டாய்’

தமிழ் தாழ் யின் அர்த்தம்

தாழ்

பெயர்ச்சொல்