தமிழ் தாழ்த்து யின் அர்த்தம்

தாழ்த்து

வினைச்சொல்தாழ்த்த, தாழ்த்தி

 • 1

  (ஒன்று) இருந்த நிலையிலிருந்து இறக்குதல்; கீழ் நோக்கி இருக்கச்செய்தல்.

  ‘கையில் பிடித்திருந்த பத்திரிகையைச் சற்றுத் தாழ்த்தி என்னைப் பார்த்தார்’
  ‘ராணுவ வீரர்கள் துப்பாக்கியைத் தாழ்த்திப் பிடித்தவாறு ஓடிப் பயிற்சி செய்தனர்’

 • 2

  (குரலின் ஒலியை) குறைத்தல்.

  ‘அப்பா தூங்கிக்கொண்டிருந்ததால் நான் குரலைத் தாழ்த்திப் பேசினேன்’

 • 3

  (மதிப்பில்) குறையச்செய்தல்.

  ‘நீ உன்னை இந்த நிலைக்குத் தாழ்த்திக் கொண்டிருக்க வேண்டாம்’