தமிழ் தாழ்வாரம் யின் அர்த்தம்

தாழ்வாரம்

பெயர்ச்சொல்

  • 1

    (வீடு, கட்டடம் முதலியவற்றின் முன்புறத்தில்) சாய்வாக நீட்டிக்கப்பட்ட கூரையின் கீழ் உள்ள பகுதி.

    ‘மழை விடும்வரை அந்த வீட்டுத் தாழ்வாரத்தில் ஒதுங்கியிருக்கலாம்’
    ‘வந்தவர் தாழ்வாரத்துத் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார்’
    ‘அலுவலகத்தின் தாழ்வாரத்தில் சிலர் காத்துக்கொண்டிருந்தனர்’