தமிழ் தாழ்வு யின் அர்த்தம்

தாழ்வு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  குறைந்த உயரம்.

  ‘விமானம் தாழ்வாகப் பறந்து உணவுப் பொட்டலங்களைப் போட்டது’
  ‘தாழ்வான கூரையில் இடித்துக்கொள்ளாமலிருக்கக் குனிந்து சென்றான்’

 • 2

  (நிலத்தைக் குறிக்கும்போது) பிற பகுதிகளைவிட மட்டத்தில் குறைந்திருக்கும் தன்மை.

  ‘தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியிருந்தது’
  ‘நீர் அரித்துச்சென்றதால் அந்த இடம் தாழ்வாக இருந்தது’

 • 3

  மதிப்புக் குறைவு.

  ‘இதைச் செய்வதில் உனக்கு எந்த விதத் தாழ்வும் இல்லை’

 • 4

  (ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படும்) சரிவு; வீழ்ச்சி.

  ‘என் வாழ்விலும் தாழ்விலும் துணைநின்ற நண்பர்கள் சிலரே’