தாவு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தாவு1தாவு2தாவு3

தாவு1

வினைச்சொல்தாவ, தாவி

 • 1

  (கீழிருந்து மேலாகவோ இருந்த இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கோ) உந்திப் பாய்தல்.

  ‘பந்தைத் தாவிப் பிடித்தார்’
  ‘புறப்பட்டுக்கொண்டிருந்த வண்டியில் தாவி ஏறினான்’
  ‘அணில் கிளைக்குக் கிளை மிக எளிதாகத் தாவிச் செல்லும்’
  உரு வழக்கு ‘பேச்சு அரசியலிலிருந்து மொழிப் பிரச்சினைக்குத் தாவியது’

 • 2

  (தீ) பரவுதல்.

  ‘தீ மற்ற குடிசைகளுக்கும் மளமளவென்று தாவியது’

தாவு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தாவு1தாவு2தாவு3

தாவு2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு தாவல்.

  ‘ஒரே தாவில் எட்டி உத்திரத்தைத் தொட்டார்’

தாவு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தாவு1தாவு2தாவு3

தாவு3

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (ஒருவருடைய) பலம்; சக்தி.

  ‘வேலையை முடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும் போலிருக்கிறது’