தமிழ் திக்கித்திணறு யின் அர்த்தம்

திக்கித்திணறு

வினைச்சொல்-திணற, -திணறி

 • 1

  (ஒன்றைச் செய்வதில் அல்லது ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு) அதிகச் சிரமப்படுதல்.

  ‘கிழவர் மாடிப்படி ஏறுவதற்குள் திக்கித்திணறிப்போய்விட்டார்’
  ‘தேர்வைத் திக்கித்திணறி எழுதி முடித்தான்’
  ‘வாழ்வின் சோதனைகளில் திக்கித்திணறியபோது வழிகாட்டியவர்’

 • 2

  (வார்த்தைகளை) சீராக வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுதல்.

  ‘திக்கித்திணறி ஏதோ சொன்னான்’