தமிழ் திக்குமுக்காடு யின் அர்த்தம்

திக்குமுக்காடு

வினைச்சொல்திக்குமுக்காட, திக்குமுக்காடி

 • 1

  (ஒரு சூழலில் இயல்பாகச் செயல்பட முடியாமல்) மிகவும் திணறுதல்.

  ‘கூட்டத்தில் மூச்சு விட முடியாமல் திக்குமுக்காடிவிட்டான்’
  ‘அவருடைய கேள்விகளால் நான் திக்குமுக்காடிப் போனேன்’
  ‘கால்பந்தாட்டத்தில் எதிர் அணியினர் நம் அணியினரைத் திக்குமுக்காடச் செய்துவிட்டனர்’
  ‘அவர்களது அன்பான உபசரிப்பில் திக்குமுக்காடிப்போனேன்’