தமிழ் திகழ் யின் அர்த்தம்

திகழ்

வினைச்சொல்திகழ, திகழ்ந்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (ஒன்று ஓர் இடத்தில்) பொலிவுடன் இருத்தல்; பிரகாசித்தல்.

  ‘வானில் திகழும் நிலவு’
  ‘பரந்த நெற்றியில் சந்தனப் பொட்டு திகழ வந்தார்’

 • 2

  உயர் வழக்கு (குறிப்பிட்ட தன்மை உடையவராக அல்லது உடையதாக) சிறப்புடன் இருத்தல்; விளங்குதல்.

  ‘அவர் தம் வாழ்நாள் முழுவதும் ஒரு தேசியவாதியாகத் திகழ்ந்தார்’
  ‘குடல்புண்ணுக்கு மணத்தக்காளி அருமருந்தாகத் திகழ்கிறது’