தமிழ் திட்டம் யின் அர்த்தம்

திட்டம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (தனிநபர்) ஒரு செயலை அல்லது (அரசு போன்றவை) சமூக, பொருளாதார வளர்ச்சிப் பணிகளைக் குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிப்பதற்கு உரிய வழி முறைகளை ஆலோசித்துத் தயாரிக்கும் செயல்முறை அல்லது ஏற்பாடு.

  ‘வாழ்க்கையில் முன்னேறத் திட்டம் போட்டுச் செயல்படுகிறார்’
  ‘ஏற்றுமதி வளர்ச்சிக்கெனத் தொழில் துறை ஒரு புதிய திட்டத்தை வகுத்திருக்கிறது’

 • 2

  செயல்முறை; ஏற்பாட்டின் முன் வரைவு.

  ‘புதிய குடியிருப்பு எப்படி உருவாக இருக்கிறது என்பதை இந்தத் திட்டத்தில் காணலாம்’

 • 3

  (ஒன்றை மற்றொன்றில் கலக்கும்போது) உரிய அளவு.

  ‘கலவைக்கு எவ்வளவு சிமிண்டு சேர்ப்பது என்ற திட்டம் உனக்குத் தெரியாதா?’
  ‘சாம்பாருக்குத் திட்டமாக உப்புப் போடு’