தமிழ் திட்டு யின் அர்த்தம்

திட்டு

வினைச்சொல்திட்ட, திட்டி

 • 1

  (கோபத்தில் ஒருவருடைய) மனத்தைப் புண்படுத்தும்படி பேசுதல்.

  ‘‘அறிவு கெட்டவனே’ என்று திட்டியதும் அவன் முகம் சுருங்கிவிட்டது’
  ‘தன்னை அடித்தவனைக் கெட்ட வார்த்தைகளால் திட்டினான்’

 • 2

  (கோபமான வார்த்தைகளைப் பயன்படுத்தி) கண்டித்தல்; கடிந்துகொள்ளுதல்.

  ‘நேரம் கழித்துப் போனால் அப்பா திட்டுவார் என்று பயந்தான்’

தமிழ் திட்டு யின் அர்த்தம்

திட்டு

பெயர்ச்சொல்

 • 1

  மனத்தைப் புண்படுத்தும் பேச்சு.

  ‘வயிற்றுப் பிழைப்புக்காகத் திட்டு எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது’

 • 2

  (கோபமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒருவரை) கண்டித்துப் பேசும் பேச்சு.

  ‘இரவு பத்து மணிக்குப் போய்ச் சாப்பாடு கேட்டால் அம்மாவிடம் திட்டு வாங்க வேண்டியிருக்கும்’

தமிழ் திட்டு யின் அர்த்தம்

திட்டு

பெயர்ச்சொல்

 • 1

  (சுற்றியுள்ள சமமான பரப்போடு ஒப்பிடும்போது) சற்று மேடாகத் தெரியும் சிறிய பரப்புடைய பகுதி.

  ‘ஆற்றில் நீர் குறைந்த பின் மணல் திட்டுகள் தெரிந்தன’
  ‘முன்பு இங்கு ஓர் ஆசிரமம் இருந்ததற்கு அடையாளம் இந்தச் சிறு திட்டுதான்’

 • 2

  சுற்றியுள்ள பகுதியிலிருந்து நிறம் மாறியிருக்கும் பரப்பு/(உடலில்) சிறு தடிப்பு.

  ‘வேட்டியில் திட்டாகக் காப்பிக் கறை’
  ‘கொசு கடித்து முகம் திட்டுதிட்டாக வீங்கியிருந்தது’