தமிழ் திடப்பொருள் யின் அர்த்தம்

திடப்பொருள்

பெயர்ச்சொல்

  • 1

    கெட்டித் தன்மையையும் குறிப்பிட்ட ஒரு வடிவத்தையும் உடைய பொருள்.

    ‘உலோகங்கள் எல்லாம் திடப் பொருள்களே’
    ‘தேங்காய் எண்ணெய் குளிர் காலத்தில் உறைந்து திடப்பொருளாக மாறுகிறது’
    ‘திடப்பொருளாக உள்ள இரும்பு உயர் வெப்பநிலையில் உருகும் தன்மை உடையது’