தமிழ் திடம் யின் அர்த்தம்

திடம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  கெட்டியாகவும் நெகிழ்வுத் தன்மையற்றதாகவும் இருப்பது.

  ‘தண்ணீர் திட நிலையில் பனிக்கட்டியாக இருக்கிறது’

 • 2

  (நம்பிக்கை, கருத்து முதலியவற்றைக் குறிப்பிடும்போது) எளிதில் தளராதது; உறுதி.

  ‘இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற திடமான நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம்’
  ‘அவர் தனக்கு உதவுவார் என்று திடமாக நம்பினான்’

 • 3

  திடகாத்திரம்.

  ‘இந்த வயதிலும் அவர் எவ்வளவு திடமாக இருக்கிறார்!’