தமிழ் திடீர் யின் அர்த்தம்

திடீர்

பெயரடை

 • 1

  (எந்த வித) அறிவிப்பும் (நிகழ்வதற்கான) அறிகுறியும் இல்லாத; சற்றும் எதிர்பாராத.

  ‘அவரிடம் எதனால் இப்படி ஒரு திடீர் மனமாற்றம் ஏற்பட்டது என்று தெரியவில்லை’
  ‘மருத்துவமனைகளில் அமைச்சர் திடீர் சோதனை நடத்தினார்’

 • 2

  பேச்சு வழக்கு (உணவுப் பொருள்களைக் குறிக்கும்போது) மிகக் குறுகிய நேரத்தில் எளிய முறையில் தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் பக்குவப்படுத்தப்பட்ட.

  ‘திடீர் இட்லி’
  ‘திடீர் ரசம்’