தமிழ் திடல் யின் அர்த்தம்

திடல்

பெயர்ச்சொல்

  • 1

    (விளையாட்டு, பொருட்காட்சி முதலியவை நடக்கும்) பரந்த வெளி; மைதானம்.

    ‘அந்த விளையாட்டுத் திடலில் சிறுவர்கள் ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்’
    ‘இந்தத் திடலில்தான் வருடாவருடம் புத்தகக் கண்காட்சி நடக்கும்’