தமிழ் திணறு யின் அர்த்தம்

திணறு

வினைச்சொல்திணற, திணறி

 • 1

  தவித்தல்; திண்டாடுதல்.

  ‘கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் காவலர்கள் திணறினர்’
  ‘வியாபாரிகள் வரி கட்ட முடியாமல் திணறுகின்றனர்’
  ‘கணக்கைப் போட முடியாமல் திணறுகிறான்’

 • 2

  (மூச்சு) தடைபடுதல்/(மூச்சு தடைபடுவதால்) கஷ்டப்படுதல்.

  ‘தண்ணீரில் விழுந்தவன் நீச்சல் தெரியாததால் மூச்சுத் திணறிச் செத்தான்’
  ‘மூச்சிரைப்பால் திணறுகிறான்’