தமிழ் திணி யின் அர்த்தம்

திணி

வினைச்சொல்திணிக்க, திணித்து

 • 1

  (பெட்டி, பை முதலியவற்றின் கொள்ளளவுக்கு மேல் பொருளை) ஒழுங்கற்ற முறையில் நுழைத்து வைத்தல்; (பொருளை) சீரற்ற விதத்தில் அடைத்தல்.

  ‘இந்தச் சின்னப் பெட்டிக்குள் இவ்வளவு துணியையும் திணிக்கப் போகிறாயா?’
  ‘குழந்தை லட்டை வாங்கி வாயில் திணித்துக்கொண்டது’
  ‘பணத்தை வாங்கிப் பையில் திணித்துக்கொண்டான்’

 • 2

  (ஒன்றை வைத்துக்கொள்ளுமாறு) வலிய அல்லது வலுக்கட்டாயமாகக் கொடுத்தல்.

  ‘‘செலவுக்கு வைத்துக்கொள்’ என்று கூறி நூறு ரூபாயை என் கையில் திணித்தார்’
  ‘குழந்தையைத் தன் தங்கையின் கையில் திணித்துவிட்டு வேலைக்குச் சென்றாள்’

 • 3

  (விருப்பத்துக்கு மாறாக ஒருவர்மீது பொறுப்பு, கருத்து முதலியவற்றை) சுமத்துதல்; ஏற்கச் செய்தல்.

  ‘குழந்தைகள்மீது நம் கருத்துகளைத் திணிக்கக் கூடாது’
  ‘முதலமைச்சர் பதவி அவர்மீது திணிக்கப்பட்டது’
  ‘ஒவ்வொரு வருடமும் பொதுமக்கள் மீது புதிய வரிகள் திணிக்கப்படுகின்றன’
  ‘மக்கள் நலனுக்கு எதிரான சட்டங்களை அரசு அவர்கள் மீது திணிக்கக் கூடாது’