தமிழ் திணை யின் அர்த்தம்

திணை

பெயர்ச்சொல்

 • 1

  இலக்கணம்
  மனிதர்களையும் விலங்குகளையும் பொருள்களையும் பிரிக்கும் பகுப்பு.

  ‘உயர்திணை’
  ‘அஃறிணை’

 • 2

  (சங்க இலக்கியத்தில் அகம், புறம் என்னும் பிரிவுகளுக்காகச் சொல்லப்பட்ட) ஒழுக்கம்.

  ‘அகத்திணை’
  ‘புறத்திணை’

 • 3

  (சங்க இலக்கியத்தில்) நிலங்களைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகைகளாகப் பிரிக்கும் பாகுபாடு.

  ‘குறிஞ்சித் திணையில் கபிலர் பாடிய பல பாடல்கள் அற்புதமானவை’