தமிழ் திதி யின் அர்த்தம்

திதி

பெயர்ச்சொல்

  • 1

    அமாவாசைக்கு அல்லது பௌர்ணமிக்குப் பின் வரும் காலத்தைப் பதினைந்தாகப் பிரித்த பிரிவுகளில் ஒன்று.

    ‘பிரதமை திதி’

  • 2

    இறந்துபோன உறவினரின் நினைவாக ஆண்டுதோறும் அவர் இறந்த தினத்தன்று நடத்தப்படும் சடங்கு.

    ‘பஞ்சாங்கத்தைக் கொண்டுவா. என்றைக்கு அம்மாவின் திதி வருகிறது என்று பார்க்கலாம்’