தமிழ் தின் யின் அர்த்தம்

தின்

வினைச்சொல்தின்ன, தின்று

 • 1

  (விலங்குகள் இரை) உட்கொள்ளுதல்/(மனிதர்களின் செயலாகக் குறிப்பிடும்போது) (பழம், முறுக்கு போன்ற உணவுப் பொருள்களைப் பல்லால் கடித்து) சாப்பிடுதல்.

  ‘மாடுகள் வைக்கோலைத் தின்றுகொண்டிருந்தன’
  ‘கழுகு கோழிக் குஞ்சைத் தூக்கிச் சென்று கொத்தித் தின்றது’
  ‘குழந்தை முறுக்குத் தின்கிறது’
  ‘ஆப்பிள் பழத்தை நறுக்காமலேயே கடித்துத் தின்றான்’

 • 2

  (கரையான், அமிலம் முதலியவை ஒன்றை) அரித்தல்; இற்றுப்போகச் செய்தல்.

  ‘புதைந்து கிடந்த மரக் கட்டையை மண் தின்றுவிட்டது’

 • 3

  (பயம், கவலை முதலியவை) சிறுகச்சிறுக வருத்துதல்.

  ‘மேலதிகாரி என்ன சொல்வாரோ என்ற பயம் அவனைத் தின்றுகொண்டிருந்தது’
  ‘மகனை இழந்த கவலையே அவனைத் தின்றுவிடும் போலிருந்தது’

 • 4

  பேச்சு வழக்கு (ஒருவரிடம் அடி, உதை) வாங்குதல்.

  ‘உன்னிடம் அடி, உதை தின்ன வேண்டுமென்று எனக்கென்ன தலையெழுத்து?’

தமிழ் தின் யின் அர்த்தம்

தின்

துணை வினைதின்ன, தின்று

 • 1

  ஒரு செயல் மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைச் சுட்டிக்காட்டப் பயன்படும் துணை வினை.

  ‘வெட்கம் அவளைப் பிடுங்கித்தின்றது’
  ‘கவலை அவனை அரித்துத்தின்றது’