தமிழ் தினக்கூலி யின் அர்த்தம்

தினக்கூலி

பெயர்ச்சொல்

  • 1

    நிரந்தரப் பணியாளராக இல்லாமல் அன்றைய பணிக்கு அன்றே பெறும் சம்பளம்/மேற்குறித்த முறையில் பணி செய்பவர்.

    ‘தினக்கூலிகளாக இருக்கும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அஞ்சல்துறை ஊழியர்கள் கோரிவருகின்றனர்’
    ‘ஒரு தொழிலாளிக்கு அளிக்கப்படும் தினக்கூலி நூறு ரூபாய்’
    ‘ரிக்ஷா ஓட்டிகள், வண்டி இழுப்பவர்கள், மூட்டை தூக்குவோர் போன்ற தினக்கூலிகளின் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகவே இருக்கிறது’