தமிழ் தினவு யின் அர்த்தம்

தினவு

பெயர்ச்சொல்

 • 1

  (உடலில் ஏற்படும்) அரிப்பு; நமைச்சல்.

  ‘வைக்கோலில் உட்கார்ந்ததால் உடம்பு முழுவதும் ஒரே தினவு’
  ‘எருமை தன் தினவைத் தீர்த்துக்கொள்வதற்காக மரத்தில் உடலைத் தேய்த்துக்கொண்டிருந்தது’

 • 2

  (ஒன்றை அடைய வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்கிற) தீவிர உந்துதல்.

  ‘எழுத வேண்டும் என்பது ஒரு தினவுதான்’

 • 3

  வட்டார வழக்கு திமிர்.

  ‘பணம் சேர்ந்துவிட்டதால் அவன் தினவெடுத்துத் திரிகிறான்’