தமிழ் தினுசு யின் அர்த்தம்

தினுசு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (ஒரே பிரிவைச் சேர்ந்தவற்றுள் குறிப்பிடப்படுவது) மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி அறியக்கூடிய வகையில் அமைவது; விதம்; ரகம்.

  ‘புத்தகம் புதுத் தினுசாக இருக்கிறதே என்று கையில் எடுத்துப் பார்த்தார்’
  ‘அதே கதையை வேறு தினுசாக எழுதியிருக்கிறாய்’
  ‘அவன் ஒரு தினுசான ஆள். அவனிடம் கவனமாய்ப் பழகு’
  ‘இந்தக் கடையில் பல தினுசுகளில் சட்டைகள் உள்ளன’
  ‘தினுசுதினுசாக விளையாட்டுச் சாமான்கள் வந்துள்ளன’
  ‘என் பையனுக்குத் தினுசுதினுசாகச் சாப்பிட வேண்டும்’