தமிழ் திரட்டு யின் அர்த்தம்

திரட்டு

வினைச்சொல்திரட்ட, திரட்டி

 • 1

  (பணம், தகவல், குறிப்பிட்ட பொருள் முதலியவற்றை) பலரிடமிருந்து அல்லது பல இடங்களிலிருந்து பெற்று ஒரு இடத்தில் சேர்த்துவைத்தல்; சேகரித்தல்.

  ‘தன் பாட்டனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதப் பல செய்திகளைத் திரட்டிவருகிறார்’
  ‘கட்சித் தொண்டர்கள் தேர்தலுக்கு நிதி திரட்டுகிறார்கள்’
  ‘ஆயிரம் ரூபாய்கூட உன்னால் திரட்ட முடியவில்லையா?’
  உரு வழக்கு ‘தன் சக்தியையெல்லாம் திரட்டி எழுந்து நின்றான்’

 • 2

  (ஒரு நோக்கத்திற்காக ஆட்களை) ஒன்றுபடச் செய்தல்; கூட்டுதல்; (ஆட்களின் ஆதரவை) பெறுதல்.

  ‘அநீதிகளை எதிர்த்துப் போராட மக்களைத் திரட்டுவோம்’
  ‘ஆட்களைத் திரட்டிக்கொண்டு அடிக்க வந்துவிட்டான்’
  ‘அணு ஆயுத ஒழிப்பிற்கு உலக மக்களிடையே ஆதரவு திரட்ட வேண்டும்’

 • 3

  பேச்சு வழக்கு (சாணம் முதலியவற்றை) சேர்த்து உருட்டுதல்.

  ‘சாணத்தைத் திரட்டிக் கூடையில் வைத்தாள்’

தமிழ் திரட்டு யின் அர்த்தம்

திரட்டு

பெயர்ச்சொல்

 • 1

  (பாடல், கட்டுரை முதலியவற்றின்) தொகுப்பு.

  ‘தனிப்பாடல் திரட்டு’
  ‘கட்டுரைத் திரட்டு’