திரள் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : திரள்1திரள்2திரள்3

திரள்1

வினைச்சொல்

 • 1

  (ஓர் இடத்தில் மக்கள்) பெருமளவில் கூடுதல்.

  ‘தேர் இழுக்க பக்தர்கள் திரண்டனர்’
  ‘அதிகாரியை வழி அனுப்பிவைக்க ஊரே திரண்டுவிட்டது’

 • 2

  (கண்ணீர், வெண்ணெய் முதலியவை சிறுகச்சிறுகச் சேர்ந்து) ஒன்றாதல்.

  ‘கண்களில் கண்ணீர் திரண்டு நின்றிருந்தது’
  ‘கரும்புச் சாற்றைக் காய்ச்சும்போது விரைவில் வெல்லம் திரளாது’
  ‘வெண்ணெய் திரண்டு வரும்போது பானை உடைந்ததுபோல் அல்லவா ஆகிவிட்டது!’

 • 3

  (கடுமையான உடற்பயிற்சி செய்வதால் தசைகள்) புடைத்தும் இறுகியும் வலிமையோடும் காணப்படுதல்.

  ‘மல்யுத்த வீரரின் புஜங்கள் திரண்டு பெருத்திருந்தன’

திரள் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : திரள்1திரள்2திரள்3

திரள்2

வினைச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (பெண்) பருவமடைதல்.

  ‘உன் பெண் திரண்டுவிட்டாளா?’

திரள் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : திரள்1திரள்2திரள்3

திரள்3

பெயர்ச்சொல்

 • 1

  (ஓர் இடத்தில் பலர்) ஒன்று கூடிய நிலை; கூட்டம்.

  ‘கடற்கரையில் ஒரே ஜனத் திரள்’
  ‘பெரும் திரளான மாணவர்கள் பொருட்காட்சிக்கு வந்திருந்தனர்’

 • 2

  (ஒரு பொருளின்) திரண்ட நிலை; (பலவற்றின்) நெருக்கமான தொகுதி.

  ‘சதைத் திரள்’
  ‘வெண்ணெய்த் திரள்’