திருட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : திருட்டு1திருட்டு2

திருட்டு1

பெயர்ச்சொல்

 • 1

  தனக்குச் சொந்தம் இல்லாத ஒன்றை உரியவரின் அனுமதி இல்லாமல் எடுத்துக்கொள்ளும் முறையற்ற செயல்; களவு.

  ‘அவர் வீட்டில் இல்லாதபோது இந்தத் திருட்டு நடந்திருக்கிறது’
  ‘வங்கியில் நடந்த திருட்டைக் கண்டுபிடிக்கத் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது’
  ‘இலக்கியத் திருட்டு’

 • 2

  (பெரும்பாலும் பெயரடையாக) பிறருக்குத் தெரியாமல் அல்லது பிறர் கவனத்தை ஈர்க்காமல் செய்யப்படும் செயல்.

  ‘சுவரேறிக் குதித்துத் திருட்டுத்தனமாக வீட்டுக்குள் நுழைந்தான்’
  ‘நிலத்துக்காரனுக்குத் தெரியாமல் கிணற்றில் திருட்டுக் குளியல் போட்டான்’

திருட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : திருட்டு1திருட்டு2

திருட்டு2

பெயரடை

 • 1

  (முகபாவம், கண்கள் ஆகியவற்றைக் குறிக்கும்போது) திருடிவிட்டு அகப்பட்டுக்கொண்டவனுக்கு இருப்பதைப் போன்ற.

  ‘திருட்டுக் களை’
  ‘திருட்டு முழி’