தமிழ் திருட்டுத்தனம் யின் அர்த்தம்

திருட்டுத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  திருடும் இயல்பு அல்லது செயல்.

  ‘பணத்தை அவன் கண்ணில் படுவதுபோல் எங்கும் வைத்துவிடாதே. அவனுக்குத் திருட்டுத்தனம் அதிகம்’

 • 2

  பிறருக்குத் தெரியாமல் ரகசியமாக செய்யும் (பிறர் ஏற்றுக்கொள்ளாத அல்லது அனுமதிக்காத) செயல் அல்லது தன்மை.

  ‘கூட்டத்தில் திருட்டுத்தனமாக அவளைப் பார்த்துச் சிரித்தான்’
  ‘உங்கள் திருட்டுத்தனங்கள் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும்’