திருடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

திருடு1திருடு2

திருடு1

வினைச்சொல்திருட, திருடி

 • 1

  ஒன்றை உரியவரின் அனுமதி இல்லாமல் அல்லது யாருக்கும் தெரியாமல் எடுத்தல்.

  ‘பையிலிருந்து பணத்தைத் திருடும்போது கையும்களவுமாகப் பிடிபட்டான்’
  ‘கடைப் பையன் கடையிலிருந்து அரிசி திருடி விற்றிருக்கிறான் என்று தெரியவந்தது’

 • 2

  (ஒன்றை) யாருக்கும் தெரியாமல் பயன்படுத்துதல்.

  ‘இந்தப் படத்தின் சில காட்சிகள் ஒரு பிரெஞ்சு படத்திலிருந்து திருடப்பட்டவை’

திருடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

திருடு1திருடு2

திருடு2

பெயர்ச்சொல்

 • 1

  களவு.

  ‘பக்கத்து வீட்டில் திருடு நடந்ததுகூடத் தெரியாமல் தூங்கியிருக்கிறாய்’
  ‘அவனிடம் திருடு, பொய், சூதுவாது கிடையாது’