தமிழ் திருத்தம் யின் அர்த்தம்

திருத்தம்

பெயர்ச்சொல்

 • 1

  (எழுதப்பட்டவற்றில் அல்லது அச்சிடப்பட்டவற்றில் உள்ள) பிழைகளை நீக்கி ஒழுங்குபடுத்தித் தரும் முறை.

  ‘புத்தகத்தின் இறுதியில் பிழைகளும் பிழைகளுக்கான திருத்தங்களும் தரப்பட்டுள்ளன’

 • 2

  (சட்டம், தீர்மானம் முதலியவற்றில் செய்யப்படும்) மாற்றம்.

  ‘வருமான வரிச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரினர்’

தமிழ் திருத்தம் யின் அர்த்தம்

திருத்தம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (நோய் நீங்கிப் பெறும்) சுகம்; குணம்.

  ‘அறுவைச் சிகிச்சைக்குப் பின் கண் நல்ல திருத்தம்’